விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ள வனிதா!

விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ள வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் தான் விஜயுடன் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார் தற்போது சமூக ஊடகங்களில் மிகப் பிரபலம். பல ஆண்டுகளாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த வனிதா கடைசி சில வருடங்களில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா, தனது கம்பீரமான ஆட்டத்தால் அனைவரையும் ஆட்டிப் படைத்தார். அந்த சீஸனின் மிக முக்கியமாக போட்டியாளர் யார் என்றால் அனைவரும் கூறுவது வனிதாவாகத் தான் இருக்கும். அதையடுத்து பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்தது முதல் தற்போது நடந்தது வரை அனைவரும் அறிந்ததே.

விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ள வனிதா!

தற்போது வனிதா, ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் திருமதி ஹிட்லர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவின.

வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமான ‘சந்திரலேகா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் வனிதா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். வனிதா வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில் விஜய் மற்றும் இயக்குனர் நம்பிராஜனும் இடம் பெற்றுள்ளனர். கருப்பு வெள்ளையில் இதுவரை யாரும் பார்த்திராத அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story