இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே சாதனை படைத்த வரலட்சுமி!

இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே சாதனை படைத்த வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும் “கண்ணாமூச்சி” என்ற படத்தின் தலைப்பை அரசியல் சமூகம் மற்றும் திரைததுறையைச் சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.

கோலிவுட்டின் திறமையான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி. பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருகிறார். தற்போது இது வரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் தானே திரைக்கதை எழுதி இயக்குனராகவும் அறிமுகமாகிறார். அந்தப் படத்திற்கு கண்ணாமூச்சி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Image

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளரான என்.இராமசாமி இப்படத்தைத் தயாரிக்கிறார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான்.

இந்த படத்தின் தலைப்பை இன்று (18.10.2020) காலையில் அரசியல், சமூகம், மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டு சாதனை படைத்தனர்.

படத் தலைப்பை வெளியிட்ட பெண் பிரபலங்கள் வருமாறு –
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சங்கீதா விஜய், கிருத்திகா உதய்நிதி, ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், சுகாசினி மணிரத்தினம், ஹேமா ருக்மணி, ரம்யா சுப்ரமணியம், ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா, லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய் பல்லவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சுருதிஹாசன், அக்சராஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், ரெஜினா , காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், அதிதிரவிசந்திரன், பாவனா, திவ்யதர்ஷினி (டி.டி.) சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், சாயிஷா, அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி, லட்சுமி மஞ்சு, சுஜாதா, கீதாஞ்சலி, கிக்சோனு, சின்மயி, அப்சரா ரெட்டி, சாரதா ஸ்ரீநாத், பிருந்தா மாஸ்டர், வாசுகி, டைரக்டர் காயத்ரி, ஜோஷ்னா சின்னப்பா, சிபி ஸ்ரீதேவி.

Share this story