இயக்குனர் வெங்கட் பிரபு தயார் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்

இயக்குனர் வெங்கட் பிரபு தயார் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயார் மறைவுக்கு நடிகர் சிம்பு தனது இங்கலை தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குனர் கங்கை அமரன் மனைவியும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயாருமான மணிமேகலை உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு தயார் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்

இந்நிலையில் வெங்கட் பிரபு தயார் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக்கொண்டு செல்பவர்கள் நீங்கள்.

இயக்குனர் வெங்கட் பிரபு தயார் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்

கடந்த இரண்டு வருடமாக, இதற்குமுன் நட்பாக இருந்து இருந்தாலும், இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு ஆழமாக எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் என பார்த்திருக்கிறேன். ஆனால் அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன்.

இயக்குனர் வெங்கட் பிரபு தயார் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல்

அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு. அப்பாவிற்கும் குடும்பத்திற்கும், உங்கனைவருடனும், இழப்பையும்.. வேதனையும் பகிர்ந்து கொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Share this story