வடசென்னை 2 எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.
தனுஷ் வெற்றிமாறன் இருவரும் கூட்டணிக்கு கோலிவுட்டில் எப்போதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வெற்றிமாறன் தனுஷை காட்சிப்படுத்தும் விதமே தனி. மற்ற படங்களை விட வெற்றிமாறன் படங்களில் தனுஷின் முழு நடிப்பையும் நம்மால் பார்க்க முடியும். இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள பொல்லாதவன், வடசென்னை, அசுரன் படங்களே இதற்கு சாட்சி.

வடசென்னை படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போது வெற்றிமாறன் வடசென்னை படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் வடசென்னை 2-ம் பாகம் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தான் வடசென்னை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.