வெற்றிமாறன்-சூரி படத்தின் புதிய அப்டேட்..

வெற்றிமாறன்-சூரி படத்தின்  புதிய அப்டேட்..

வெற்றிமாறன் – நடிகர் சூரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன்-சூரி படத்தின்  புதிய அப்டேட்..

இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் சூரி ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார்.

வெற்றிமாறன்-சூரி படத்தின்  புதிய அப்டேட்..

இந்தப் படம் இளையராஜா இசையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சூரிக்கு தந்தையாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று நடிகர் கிஷோர் முக்கிய வேடம் ஒன்றில் நடிகிறார்.சூரி போலீஸ்காரராக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வந்தது.

வெற்றிமாறன்-சூரி படத்தின்  புதிய அப்டேட்..

இந்நிலையில் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து சிறிது இடைவேளை விடப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் ‌இந்த படத்தின் இரண்டாம் ‌கட்ட ஷூட்டிங் செங்கல்பட்டு அருகே தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகலாம் என ‌கூறப்படுகிறது.

Share this story