வெற்றிமாறன்- சூரி படத்தின் தலைப்பு ‘விடுதலை’!

வெற்றிமாறன்- சூரி படத்தின் தலைப்பு ‘விடுதலை’!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு இளையாராஜா இசையமைக்கிறார்.

எழுத்தாளர் ஜெகன்மோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, கிஷோர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

வெற்றிமாறன்- சூரி படத்தின் தலைப்பு ‘விடுதலை’!

வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கடந்த மாதமே தெரிவித்திருந்தோம்.

தற்போது படத்திற்கு விடுதலை என்ற தலைப்பு தான் என்று நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன. ஏற்கனேவே விடுதலை என்ற தலைப்பில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் நடிப்பில் 1986-ன் ஆண்டு படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகு தான் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this story