இவ்ளோ அழகான கிறிஸ்துமஸ் தாத்தாவ பாத்திருக்க முடியாது… துப்பாக்கி பட வில்லனின் வைரல் கெட்டப்!

இவ்ளோ அழகான கிறிஸ்துமஸ் தாத்தாவ பாத்திருக்க முடியாது… துப்பாக்கி பட வில்லனின் வைரல் கெட்டப்!

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் கிறித்துமஸ் தாதாவாக மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் இப்பதிலிருந்தே கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் வித்யுத் ஜம்வால் சாண்டா கிளாஸ் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் மரத்தின் பக்கத்தில் மிகவும் வேடிக்கையான போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார் வித்யுத்.

இவ்ளோ அழகான கிறிஸ்துமஸ் தாத்தாவ பாத்திருக்க முடியாது… துப்பாக்கி பட வில்லனின் வைரல் கெட்டப்!

‘வயதானவர்களுக்கு கொரோனா தொற்று ஆபத்து என்பதால் இந்த ஆண்டு அவரது பேரனை அனுப்புவார். குறிப்பிட்ட நாட்களே உள்ளன. உங்கள் ஆசைகளை அனுப்புங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

விதியுத்தின் இந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் தங்கள் உங்களைச் சந்திப்பது தான் எங்களுடைய கிறிஸ்துமஸ் ஆசை என்று தெரிவித்தனர்.

இவ்வளவு அழகான சாண்டாவை யாரும் பாத்திருக்க முடியாது என்று ஒருவர் பதிவிட்டார். “உங்களிடமிருந்து சில களரி அசைவுகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். மேலும் உங்களுடன் ஒரு செல்ஃபி எடுக்க விரும்புகிறேன்” என்றும் ஒருவர் தெரிவித்திருந்தார்.

தற்போது வித்யுட் கேரளாவில் உள்ளார். மேலும் அவர் சிலம்பம், களரிபாயட்டு மற்றும் பிற பாரம்பரிய தற்காப்பு கலைகளைப் பயிற்சி செய்யும் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் வித்யுத் ஜம்வால் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானார். ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா உடன் நடித்திருந்தார்.

Share this story