‘தளபதி 65’ படத்தில் நடிக்கும் துப்பாக்கி வில்லன்!

‘தளபதி 65’ படத்தில் நடிக்கும் துப்பாக்கி வில்லன்!

விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் தளபதி 65 படத்தில் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தனது 65-வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. வித்யுத் ஏற்கனவே விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

‘தளபதி 65’ படத்தில் நடிக்கும் துப்பாக்கி வில்லன்!

துப்பாக்கி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானார் வித்யுத். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு வித்யுத் வில்லனாக தேர்வு செய்யப்பட்டதும் மிக முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

‘தளபதி 65’ படத்தில் நடிக்கும் துப்பாக்கி வில்லன்!

தற்போது தளபதி 65 படத்திலும் வித்யுத் நடிக்கிறார் என்றதும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

தளபதி 65 படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share this story