விஜய்யுடன் இணையும் ‘கேஜிஎப்’ இயக்குனர்… வெளியானது மாஸ் அப்டேட்… Thalapathy 67

விஜய்யுடன் இணையும் ‘கேஜிஎப்’ இயக்குனர்… வெளியானது மாஸ் அப்டேட்… Thalapathy 67

விஜய்யின் 67வது படத்தை கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் இணையும் ‘கேஜிஎப்’ இயக்குனர்… வெளியானது மாஸ் அப்டேட்… Thalapathy 67

விஜய்யின் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் விறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜா ஹெக்டே விஜய்யிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அனிரூத் இந்த படத்திற்கு கலக்கலாக இசையமைத்து வருகிறார். படத்தில் இடம்பெறும் பாடலுக்கேற்ற நடனங்களை அமைக்க ஜானி மாஸ்டர் பாடல்களுக்கான ரீகர்சல்களை விரைவில் துவங்கவுள்ளார்.

விஜய்யுடன் இணையும் ‘கேஜிஎப்’ இயக்குனர்… வெளியானது மாஸ் அப்டேட்… Thalapathy 67

இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கோகுலம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து பாடல்கள் படமாக்கப்பட உள்ளன. இதையடுத்து வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய் 65வது படத்தின் பணிகள் நடைபெற்று இந்த வேளையில் 66வது படத்தின் பணிகளும் துவங்கிவிட்டன. இந்த படத்தை ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்த செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளது. இயக்குனர் யார் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது.

விஜய்யுடன் இணையும் ‘கேஜிஎப்’ இயக்குனர்… வெளியானது மாஸ் அப்டேட்… Thalapathy 67

இந்நிலையில் விஜய்யின் 66வது படத்தின் தகவலே இன்னும் முழுமையாக தெரியாத நிலையில், 67வது படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் யாஷை வைத்து ‘கேஜிஎப்’ என்ற இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது விஜய்யுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கேஜிஎப்பை விட பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது ‘பான் இந்தியா’ திரைப்படமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story