ஹாயாக விமானத்தில் பறந்த விஜய் தேவரகொண்டா… வைரலாகும் புகைப்படங்கள்…

ஹாயாக விமானத்தில் பறந்த விஜய் தேவரகொண்டா… வைரலாகும் புகைப்படங்கள்…

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா விமானத்தில் பறக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஹாயாக விமானத்தில் பறந்த விஜய் தேவரகொண்டா… வைரலாகும் புகைப்படங்கள்…

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கானது. தமிழில் நடிகையர் திலகம், நோட்டா,டியர் காம்ரேட் படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

ஹாயாக விமானத்தில் பறந்த விஜய் தேவரகொண்டா… வைரலாகும் புகைப்படங்கள்…

தற்போது விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் ‘லிகர்’. முன்னணி இயக்குனர் பூரி ஜகந்நாத் இயக்கும் படத்தில் ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். விளையாட்டையும், காதலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் குத்துசண்டை வீரராக விஜய்தேவரகொண்டா நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 9-ம் தேதி லிகர் திரைப்படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாயாக விமானத்தில் பறந்த விஜய் தேவரகொண்டா… வைரலாகும் புகைப்படங்கள்…

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா விமானத்தில் ஹாயாக பறக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Share this story