சுதா கொங்கராவுக்கு நோ சொன்ன விஜய் தேவரகொண்டா!?

சுதா கொங்கராவுக்கு நோ சொன்ன விஜய் தேவரகொண்டா!?

சுதா கொங்கரா படத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் 11-ம் தேதி இரவு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றது.

சுதா கொங்கராவுக்கு நோ சொன்ன விஜய் தேவரகொண்டா!?

சூர்யாவின் நடிப்பை அடுத்து சுதா கொங்கராவின் இயக்கம் தான் அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுதா கொங்கரா இயக்குனராக அறிமுகமான இறுதிச் சுற்று படத்திலே தனது முத்திரையைப் பதித்துவிட்டார் சுதா கொங்கரா. தற்போது சூரரைப் போற்று படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தனது நண்பர்களுடன் படத்தைப் பார்த்துவிட்டதாகவும், படம் அருமையாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் படம் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சுதா கொங்கராவுக்கு நோ சொன்ன விஜய் தேவரகொண்டா!?

ஆனால் தற்போது சுதா கொங்கரா படத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுதா கொங்கரா தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்காக அந்தாலஜி படம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதில் நடிக்க விஜய் தேவரகொண்டாவை அணுகியதாகவும், ஆனால் அந்தக் கதை பிடிக்காததால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்த விஜய் தேவரகொண்டா தற்போது அந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறப்படுவது அதிர்ச்சியளித்துள்ளது.

Share this story