மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்!?

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கோலிவுட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனராக வளர்ந்து வந்த லோகேஷ் கனகராஜ் தனது மூன்றாவது படத்திலேயே விஜயை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவர்கள் கூட்டணியில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்!?

தற்போது மீண்டும் லோகேஷ்- விஜய் கூட்டணி இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது. #Thalapathy66 என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. இந்தத் தகவல் உண்மையா என்று கூடத் தெரியவில்லை. இருந்தாலும் பலர் இதை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்!?

இதற்கிடையில் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

Share this story