டிவியில் வெளியாகும் ‘மாஸ்டர்’… என்னைக்கு தெரியுமா ?…

டிவியில் வெளியாகும் ‘மாஸ்டர்’… என்னைக்கு தெரியுமா ?…

விஜய் நடிப்பில் உருவாகி மாபெரும் ஹிட்டடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

டிவியில் வெளியாகும் ‘மாஸ்டர்’… என்னைக்கு தெரியுமா ?…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. சூப்பர் ஹிட்டடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. அனிரூத் இசையில் உருவான ‌பாடல்கள் பெரிய ஹிட்டடித்த நிலையில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த பாடல் யூடியூப்பிலும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

டிவியில் வெளியாகும் ‘மாஸ்டர்’… என்னைக்கு தெரியுமா ?…

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படம் உலக விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. விஜய் சேதுபதி பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். கதாநாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் விஜய்யுடனான காதல் காட்சிகளில் அசத்தியிருப்பார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவர்களின் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.

டிவியில் வெளியாகும் ‘மாஸ்டர்’… என்னைக்கு தெரியுமா ?…

திரையரங்கில் வெளியாகி வெற்றிப்பெற்ற இப்படம் இரண்டு வாரம் கழித்து ஒடிடியிலும் ரிலீசானது. இதைத்தொடர்ந்து இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. வரும் சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு இப்படம் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story