கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகர் ஒரு பாடகரா?

கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகர் ஒரு பாடகரா?

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. பிளாக் அண்ட் வைட்-ல் இருக்கும் அந்த புகைப்படம் 80களில் அவரது தந்தை விஜயகாந்தை பார்ப்பது போலவே இருந்ததாக கேப்டனின் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகர் ஒரு பாடகரா?

கேப்டனின் இளைய மகன் சண்முகபாண்டியன் தான் ’சகாப்தம்’, ’மதுரைவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.தற்போது ’மித்திரன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,இதுவரை பிசினஸ் மற்றும் தந்தையின் அரசியலில் ஈடுபட்டு வந்த விஜய் பிரபாகர் தற்போது சினிமாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.ஏனெனில் விஜய பிரபாகரன் பாடிய தனிப்பாடல் ஒன்றின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாக இருப்பதாக விஜயகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் விஜய் பிரபாகர் ஒரு பாடகரா?அப்படி இருக்கும் பட்ச்சத்தில் விரைவில் வெள்ளித்திரையில் வருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share this story