வெளியானது சின்ன கேப்டனின் ”என் உயிர் தோழா” போஸ்டர் !

வெளியானது சின்ன கேப்டனின் ”என் உயிர் தோழா” போஸ்டர் !

நடிகர் மற்றும் அரசியல் பிரமுகரான விஜயகாந்தின் முத்த மகனான விஜய பிரபாகரனின் முதல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜயகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

வெளியானது சின்ன கேப்டனின் ”என் உயிர் தோழா” போஸ்டர் !

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ’சகாப்தம்’, ’மதுரைவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.ஆனால் அவரது முத்த மகன் விஜய பிரபாகரன் இதுவரை பிசினஸ் மற்றும் தந்தையின் அரசியலில் மட்டும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் திரைப்படத்திலும் நடிக்க தற்போது களமிறங்கிவிட்டார்.

வெளியானது சின்ன கேப்டனின் ”என் உயிர் தோழா” போஸ்டர் !

என் உயிர் தோழா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜெப்பிரி ஜோனதன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் பிரபாகரன் பாடகராகவும் அறிமுகமாகிறார்.

வெளியானது சின்ன கேப்டனின் ”என் உயிர் தோழா” போஸ்டர் !

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. பிளாக் அண்ட் வைட்-ல் இருக்கும் அந்த புகைப்படம் 80களில் அவரது தந்தை விஜயகாந்தை பார்ப்பது போலவே இருந்ததாக கேப்டனின் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் விஜய் பிரபாகரன் படத்தில் நடிக்க வேண்டும் எனவும் கேப்டனின் தொண்டர்களும் ரசிகர்களும் பலநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில் அவரது இந்த பட வரவு கேப்டன் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story