வில்லாதி வில்லனாகும் விஜய் சேதுபதி… அடுத்து எந்த ஹீரோவுக்கு தெரியுமா!?

வில்லாதி வில்லனாகும் விஜய் சேதுபதி… அடுத்து எந்த ஹீரோவுக்கு தெரியுமா!?

ஜூனியர் என்டிஆர் நடிக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதி தான் தற்போது தென்னிந்திய சினிமாவில் மிரட்டல் வில்லனாகப் பார்க்கப்படுகிறார். ‘மாஸ்டர்’ படத்தில் பவானியாக மிரட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வில்லன் என்ற பெயர் எடுத்தார். அதே போல் தெலுங்கில் ‘உப்பேனா’ படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

வில்லாதி வில்லனாகும் விஜய் சேதுபதி… அடுத்து எந்த ஹீரோவுக்கு தெரியுமா!?

அப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்கு விஜய் சேதுபதியும் முக்கியக் காரணம். உப்பேனா படத்தில் முழு சுமையையும் தான் தோளில் சுமந்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டார். அதை பார்த்த டோலிவுட் திரையுலகினர் வியப்படைந்துள்ளனர்.

தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வில்லாதி வில்லனாகும் விஜய் சேதுபதி… அடுத்து எந்த ஹீரோவுக்கு தெரியுமா!?

திரிவிக்ரம் கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘ஆலவைகுண்டபுரம்லோ’ படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது தான் ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு மிகவும் சக்தி வாய்ந்த வில்லனை எதிர்பார்க்கிறார். உப்பேனா படத்தைப் பார்த்த பிறகு விஜய் சேதுபதி தான் அந்தக் கதாபாத்திரதிற்கு சரியாக இருப்பார் என்று முடிவெடுத்துள்ளாராம்.

மேலும் ஜூனியர் என்டிஆர், விஜய் சேதுபதி மோதிக்கொள்ளும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றும் நம்புகிறார். விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story