தனது பேவரைட் இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி!

தனது பேவரைட் இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி!

இயக்குனர் நலன் குமாரசாமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதி கலந்துகொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் திறமையான இளம் இயக்குநர்களில் ஒருவர் நலன் குமாரசாமி. ஆண்டாண்டு கால சினிமா கிளிஷேக்களை ஒவ்வொரு கால கட்டத்தில் ஒரு இயக்குனர் உடைத்தெறிவர். அப்படி சமீபத்திய காலத்தில் மிகவும் வித்தியாசமான படங்கள் எடுப்பதில் கை தேர்ந்தவர் நலன்.

தனது பேவரைட் இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி!

இவர் எடுக்கும் படங்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக தெரிந்தாலும் ஆழமான அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கும். நாட்டில் நடக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையோடு மக்களுக்கு பொட்டில் அடித்தால் போல் எடுத்துச் சொல்பவர் நலன் குமாரசாமி.

நலன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாள் விழாவில் விஜய் சேதுபதி கலந்துகொண்டுள்ளார். தவிர கருணாகரன் உள்ளிட்ட மற்ற கோலிவுட் பிரபலங்களும் பங்குபெற்றனர்.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என்ற இரு படங்களில் நலன் குமாரசாமி விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து பணியாற்றினர். இந்த இரு படங்களும் மக்களிடையே வித்தியாசமான கதைக்களத்திற்காக நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனது பேவரைட் இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி!

நலன் குமாரசாமி தற்போது ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்ற அந்தாலஜி படத்தை இயக்கி வருகிறார். அதில் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது பேவரைட் இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி!

Share this story