விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்… ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘மக்கள் செல்வன்’…

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்…   ரசிகர்களால் கொண்டாடப்படும்   ‘மக்கள் செல்வன்’…

ரசிகர்களால் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி
#HBDVijaySethupathi ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

எளிமையான மனிதர், நேர்மையானவர், மனதில் தோன்றதை செய்பவர், சாதாரணமாக நடிப்பவர், எதைப்பற்றியும் அலட்டி கொள்வதில்லை, மக்கள் செல்வன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு 39வது பிறந்தநாள். தமிழக திரையுலகில் முன்னணி ஹூரோக்களில் இவரும் ஒருவர்.

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்…   ரசிகர்களால் கொண்டாடப்படும்   ‘மக்கள் செல்வன்’…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எளிய குடும்பத்தில் பிறந்ததவர். பி.காம் படித்துள்ள இவர் முதல்முதலில் தனது வாழ்க்கையை ஒரு கணக்காளராக துவங்கினார். கிடைத்த வேலையை செய்துக்கொண்ட அவருக்கு அதில் சலிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை வந்த அவருக்கு சினிமாவில் ஈடுபாடு ஏற்பட்டது.

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்…   ரசிகர்களால் கொண்டாடப்படும்   ‘மக்கள் செல்வன்’…

சினிமாவுக்கு வந்தபிறகு சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். கடின உழைப்புக்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகான அறிமுகமானார். பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா படங்கள் அவரை வெளிவுலகிற்கு காட்ட தொடங்கியது. பின்னர் அவர் நடித்த சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்கள் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்…   ரசிகர்களால் கொண்டாடப்படும்   ‘மக்கள் செல்வன்’…

பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மக்கள் செல்வன், தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆனார். ஹூரோ, வில்லன் என எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து தனத நடிப்பை வெளிப்படுத்துவார். இவர் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்…   ரசிகர்களால் கொண்டாடப்படும்   ‘மக்கள் செல்வன்’…

பன்முக திறமை கொண்ட ஒரு ஒப்பற்ற கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இதுமட்டுமல்லாமல் சமூகவலைத்தளத்தில் #HBDVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துளார். இப்படி பல நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.

Share this story