சாதி, மதத்துக்கு எதிரானவன் நான், எனக்கு மனுசங்க தான் முக்கியம்… விஜய் சேதுபதி திட்டவட்டம்!

சாதி, மதத்துக்கு எதிரானவன் நான், எனக்கு மனுசங்க தான் முக்கியம்… விஜய் சேதுபதி திட்டவட்டம்!

சாதி மத பாகுபாடில்லாமல் தான் நான் எப்போதும் வாக்களிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விஜய் சைக்கிளில் வந்தது, அஜித்தின் மாஸ்க் என்ற தேர்தல் களம் கலை கட்டியுள்ளது. ரஜினிகாந்த், கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

சாதி, மதத்துக்கு எதிரானவன் நான், எனக்கு மனுசங்க தான் முக்கியம்… விஜய் சேதுபதி திட்டவட்டம்!

தற்போது நடிகர் விஜய் சேதுபதி மதியம் 2 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சாதி மத பாகுபாடின்றி வாக்களிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. எப்போதுமே அது தான் என் நிலைப்பாடு என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Share this story