குவியும் படங்கள், எகிறும் சம்பளம்… விஜய் சேதுபதியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குவியும் படங்கள், எகிறும் சம்பளம்… விஜய் சேதுபதியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதி தற்போது தனது சம்பளத்தை மிகவும் உயர்த்தியுள்ளதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

விஜய் சேதுபதியின் மார்க்கெட் தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் உயர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தி, தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

‘மாஸ்டர்’ படத்தில் பவானியாக மிரட்டியது, தெலுங்கில் ‘உப்பேனா’ படத்தில் கொடூர வில்லனாக சிலிர்க்க வைத்தது என வில்லனாகவும் கெத்து காட்டி வருகிறார் விஜய் சேதுபதி.

குவியும் படங்கள், எகிறும் சம்பளம்… விஜய் சேதுபதியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அடுத்த இரண்டு வருடங்களுக்கு மிகவும் பிசியாக இருக்கும் வண்ணம் எண்ணிலடங்கா படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். அதனால் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ஆன்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு’ 2 படத்தில் நடிக்க திண்டுக்கல் சென்றுள்ளார்.

குவியும் படங்கள், எகிறும் சம்பளம்… விஜய் சேதுபதியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஐந்து நாட்கள் நடிக்கவுள்ளாராம். அதற்கு அவர் கேட்ட சம்பளம் இரண்டரை கோடி என்று கூறப்படுகிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் 10 நாட்கள் நடித்த விஜய் சேதுபதி 3 கோடி சம்பளமாக பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Share this story