100 கோடி கிளப்பில் இணைந்த விஜய் சேதுபதி படம்!

100 கோடி கிளப்பில் இணைந்த விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் 100 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது.

கொரோனாவுக்குப் பின்னரும் தியேட்டர்கள் பழைய நிலைக்குத் திரும்ப தடுமாறி தான் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மாஸ்டர் படத்தின் மூலம் மக்கள் தியேட்டர் வரத் தயங்கிய அந்த பயத்தை உடைத்தெறிந்தனர். டோலிவுட்டில் அதே போன்று உப்பேனா படம் மக்களைத் தியேட்டர் நோக்கி படையெடுக்க வைத்தது.

100 கோடி கிளப்பில் இணைந்த விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி தெலுங்கில் ‘உப்பேனா’ படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்கு விஜய் சேதுபதியும் முக்கியக் காரணம். உப்பேனா படத்தில் முழு சுமையையும் தான் தோளில் சுமந்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டார். அதை பார்த்த டோலிவுட் திரையுலகினர் வியப்படைந்துள்ளனர்.

100 கோடி கிளப்பில் இணைந்த விஜய் சேதுபதி படம்!

உப்பேனா படத்தில் இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட பெரும்பாலானோர் இப்படத்தில் புதிதாக அறிமுகமானவர்கள் தான். இருப்பினும் படம் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்று 100 கோடியைத் தாண்டி வசூல் சாதனை செய்திருக்கிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரின் மார்க்கெட்டும் ஒரு படி உயர்ந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இந்தப் படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this story