தெலுங்கில் சூப்பர் ஸ்டாராகும் விஜய் சேதுபதி… அதிகரிக்கும் மவுசு…

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராகும் விஜய் சேதுபதி… அதிகரிக்கும் மவுசு…

விஜய் சேதுபதி நடிப்புக்கு தெலுங்கில் மவுசு அதிகரிப்பதால் அவர் நடித்துள்ள தமிழ் படங்கள் தெலுங்குக்கு டப்பிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராகும் விஜய் சேதுபதி… அதிகரிக்கும் மவுசு…

குறுகிய காலத்திற்குள் பன்முகத் திறமை வாய்ந்த நடிகராக தன்னை நிரூபித்து ‌வருகிறார் விஜய்‌சேதுபதி, தனது அசாதாரண நடிப்பால் நம்மை கவர்ந்த விஜய் சேதுபதி, ஒவ்வொரு படத்திற்கும் தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராகும் விஜய் சேதுபதி… அதிகரிக்கும் மவுசு…

கமெடி திரில்லராக உருவான சூது கவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி தனது மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.அதன்பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தில், தனது சிறந்த நடிப்புகளில் ஒன்றான திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். யதார்த்தமான அவரின் நடிப்பு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தது.இதைத்தொடர்ந்து சேதுபதி படத்தில் போலீஸ் அதிகாரியாகவும்,பீட்சா திகில் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படி அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மையை நிலை நாட்டியுள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராகும் விஜய் சேதுபதி… அதிகரிக்கும் மவுசு…

இந்நிலையில் தமிழில் கலக்கி வரும்‌ விஜய் சேதுபதி நேரடி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ள அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அண்மையில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற உப்பென்னா தெலுங்கு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் நற்மதிப்பை பெற்றுள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஸ்டாராகும் விஜய் சேதுபதி… அதிகரிக்கும் மவுசு…

தெலுங்கில் ரசிகர்களிடையே விஜய்சேதுபதி நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் அவரின் தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. தற்போது விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து அசத்திய ,’சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இதேபோன்று விஜய் சேதுபதியின் மற்ற ‌படங்களும் டப்பிங் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story