விஜய் சேதுபதி நடிக்கும் லாபம்…மீண்டும் ஷூட்டிங் தொடக்கம்… வெளியான புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடிக்கும் லாபம்…மீண்டும் ஷூட்டிங் தொடக்கம்… வெளியான புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கும் லாபம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் ஈ, பேராண்மை ஆகிய படங்களின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். விவசாயிகள் பிரச்சனை குறித்து படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி லாபம் படத்திற்கான டப்பிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

laabam

லாபம் படக்குழுவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் படப்பிடிப்பு தளப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். “தொடங்கிவிட்டது. எங்கள் தயாரிப்பான லாபம் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒர்க் மோடுக்கு திரும்பியாச்சு” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகளின் மாதிரி செட்களுடன் படக்குழு விவாதம் நடத்துவது போல் உள்ளது.

Share this story