மேகா ஆகாஷ்-க்கு பியானோ சொல்லிக்கொடுக்கும் விஜய் சேதுபதி… 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' அப்டேட்!

மேகா ஆகாஷ்-க்கு பியானோ சொல்லிக்கொடுக்கும் விஜய் சேதுபதி… 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' அப்டேட்!

அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மேகா ஆகாஷ், இயக்குனர் மோகன் ராஜா, விஸ்வகுமார் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்திற்கு கே.பிரசன்னா இசையமைக்கிறார்.  மேலும் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாவும் கூறப்படுகிறது.
தற்போது இந்தப் படத்திலிருந்து இரு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி மேகா ஆகாசுக்கு பியானோ சொல்லிக்கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Share this story