சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி… குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியின் புதிய திட்டம்!

சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி… குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியின் புதிய திட்டம்!

சன் டிவி தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கவிருக்கும் சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி… குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியின் புதிய திட்டம்!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிகழ்ச்சியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். ஒரு சமையல் நிகழ்ச்சியில் காமெடி புகுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நிகழ்ச்சியாக வெற்றி கண்டிருக்கிறார்கள் குக் வித் கோமாளி டீம்.

எனவே போட்டி டிவி தொலைக்காட்சிகள் இந்த நிகழ்ச்சிக்கு இணையான ஒரு நிகழ்ச்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சன் டிவியும் ஒரு சமையல் நிகழ்ச்சியைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் எண்டமோல் சைன் நிறுவனம் தான் உருவாக்குகின்றனராம். விஜய் டிவிக்கு நிகழ்ச்சி வழங்கி வந்த நிறுவனம் தயாரிப்பது தொலைக்காட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி… குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் டிவியின் புதிய திட்டம்!

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வெளியிடப் பட இருக்கிறதாம்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு வாரத்திற்கு அதாவது இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்கு மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் பெறும் தொகைக்கு அருகில் வந்துவிட்டதாகக் கூறப்படுகி

Share this story