விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் வரும் மே மாதம் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் கலக்கிக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தன்னுடைய இயல்பான நடிப்பால் பலமொழி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் பலமொழிகளில் நிறைய படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மாஸ்டர், குட்டி ஸ்டோரி, உப்பென்னா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.

அதோடு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றன. இதுதவிர நிறைய படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்தவகையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ படமும், அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ படமும், சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ படமும், இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படமும் வரிசையாக நான்கு படங்கள் வரும் சம்மருக்கு வெளியாகவுள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.