‘ரவுடி பிக்சர்ஸ்’-ன் சர்ப்ரைஸ் கிப்ட்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

‘ரவுடி பிக்சர்ஸ்’-ன் சர்ப்ரைஸ் கிப்ட்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் பிறந்தநாளையொட்டி ரவுடி பிக்சர்ஸ் மாஸான சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதி இன்று 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளில் பிசியாக நடித்து வரும் அவர் பன்முக திறமைக் கொண்டவர். இதனால் அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறார். சமீபத்தில் நடித்த மாஸ்டர் படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவரின் நடிப்பு, நடிகர் விஜய்-க்கு இணையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

‘ரவுடி பிக்சர்ஸ்’-ன் சர்ப்ரைஸ் கிப்ட்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

இந்நிலையில் 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படம் நானும் ரௌடிதான். மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டது. காதல் கலந்து காமெடிப் படமாக உருவாக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது இப்படம். இதனால் தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இயக்குனர் ஆனார் விக்னேஷ் சிவன்.

‘ரவுடி பிக்சர்ஸ்’-ன் சர்ப்ரைஸ் கிப்ட்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

இதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடியது.

‘ரவுடி பிக்சர்ஸ்’-ன் சர்ப்ரைஸ் கிப்ட்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி ஹூரோவாகவும், ஹூரோயின்களாக நடிகை நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே விஜய் சேதுபதியும், விக்னேஷ் சிவனும் நல்ல நண்பர்கள் என்பது திரையுலகம் அறிந்த உண்மையே. அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், விக்னேஷ் சிவனின் நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி நடித்த படங்களின் தொகுப்பை 45வினாடி ஓடும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Share this story