விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் மிரட்டும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர் வெளியானது!

விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் மிரட்டும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர் வெளியானது!

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மோகன் ராஜா, விஸ்வகுமார் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் மிரட்டும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டீசர் வெளியானது!

இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விஜய் சேதுபதி படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாகத் தெரிகிறது. படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையையும் டீசர் ஏற்படுத்தியுள்ளது.

Share this story