‘அன்புடன் குஷி’ சீரியலில் இணைந்த புதிய ஹீரோயின் யார் தெரியுமா ?

‘அன்புடன் குஷி’ சீரியலில் இணைந்த புதிய ஹீரோயின் யார் தெரியுமா ?

பிரபல சீரியலான அன்புடன்‌ குஷியில் ‘திருமணம்’ தொடரில் நடித்த முக்கிய நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

‘அன்புடன் குஷி’ சீரியலில் இணைந்த புதிய ஹீரோயின் யார் தெரியுமா ?

விஜய் டிவி சீரியல்களுக்கு எப்போதும் பார்வையாளர்கள் அதிகம். ஏனென்றால் ஒவ்வொரு சீரியலும் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியல்கள் ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பாவதால் நல்ல வரவேற்பு உள்ளது.இந்த வரிசையில் ‘அன்புடன் குஷி’ என்ற சீரியல் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

‘அன்புடன் குஷி’ சீரியலில் இணைந்த புதிய ஹீரோயின் யார் தெரியுமா ?

200-க்கும் அதிகமான எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஹீரோவாக ப்ரஜின் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் ‘குஷி’ என்ற கேரக்டரை வைத்துதான் இந்த சீரியல் நகர்கிறது. அந்த குஷி கேரக்டரில் முதலில் நடித்தவர் மான்சி ஜோஷி. பின்பு கொரானா நேரத்தில் இவர்,

இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக தற்போது ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து வருந்தார். இதையடுத்து அவரும் ஏதோ காரணத்தால் விலகிவிட்டார்.

‘அன்புடன் குஷி’ சீரியலில் இணைந்த புதிய ஹீரோயின் யார் தெரியுமா ?

இந்நிலையில் அந்த சீரியலில் குஷியான யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து ‘திருமணம்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரேயா தற்போது ‘அன்புடன் குஷி’ சீரியலில் இணைந்துள்ளார். இவராவது மாறாமல் இருப்பாரா என ரசிகர்கள் ஆதங்கத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Share this story