ரசிகர்களுடன் மாஸ்டர் படம் பார்த்த ‘விஜய்’… வைரலாகும் வீடியோ….

ரசிகர்களுடன் மாஸ்டர் படம் பார்த்த ‘விஜய்’… வைரலாகும் வீடியோ….

சென்னையில் ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை நடிகர் விஜய் பார்த்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘மாஸ்டர் பொங்கல்’ என சொல்லும் அளவுக்கு படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் விருந்து படைத்த மாஸ்டர் படம், நல்ல வசூலை பெற்றுள்ளது.

ரசிகர்களுடன் மாஸ்டர் படம் பார்த்த ‘விஜய்’… வைரலாகும் வீடியோ….

படத்தில் விஜய் நடித்திருந்த காட்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான தோற்றத்தில் காட்டியுள்ளார். வித்தியாசமான கதைக்களம், பெரிய பந்தா இல்லாத நடிப்பு, விஜய், விஜய் சேதுபதியுடன் மோதும் காட்சிகள், அனிரூத் இசை என படம் ஜோராக இருக்கிறது என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ரசிகர்களுடன் மாஸ்டர் படம் பார்த்த ‘விஜய்’… வைரலாகும் வீடியோ….

இதுபுறமிருக்க விஜய் படம் என்றாலே கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது. அந்த கொண்டாட்டங்களை பார்க்க விஜய் ஏதாவது தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது வழக்கம். அந்தவகையில் கடந்த 13ம் தேதி சென்னை தேவி திரையரங்கில் மாஸ்டர் படத்தை விஜய் பார்த்துள்ளார். ரொம்பவே சீக்ரெட்டாக காலை 7மணி காட்சிக்கு தொப்பி, மாஸ்க் அணிந்து கொண்டு வந்த அவர், புரஜெக்டர் ரூமில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். அப்போது ரசிகர்கள் படம் பார்த்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை கண்டு ரசித்துள்ளார்.

தற்போது விஜய் திரையரங்குக்கு வந்த சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றது.

Share this story