இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை: விஜய் யேசுதாஸ் அறிவிப்பால் பரபரப்பு!

இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை: விஜய் யேசுதாஸ் அறிவிப்பால் பரபரப்பு!

பாடகர் விஜய் யேசுதாஸ், தான் இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸும் பிரபல பின்னணிப் பாடகராக இருந்து வருகிறார். விஜய் யேசுதாஸ் ‘மில்லேனியம் ஸ்டார்ஸ்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் தனது பாடல் பயணத்தை துவங்கினார். அதையடுத்து தமிழ், மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். கடந்த 20 வருடங்களாக திரைத்துறையில் இருந்து வரும் விஜய் யேசுதாஸ் மூன்று முறை கேரள அரசின் மாநில விருது வென்றுள்ளார்.

இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை: விஜய் யேசுதாஸ் அறிவிப்பால் பரபரப்பு!


இந்நிலையில் விஜய் யேசுதாஸ் ஒரு ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் இனி மலையாள படங்களில் பாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மலையாள திரைத்துறையில் பின்னணி பாடகர்களுக்கு தகுந்த மதிப்பளிக்கப்படுவதில்லை. எனவே தான் தான் மலையாள படங்களில் பாடுவதை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகத்தில் இந்த மாதிரி பிரச்சினைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தனது தந்தையான யேசுதாஸுக்கும் மாதிரி இந்த மாதிரி அனுபவங்களை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this story