ஐ.நா-வின் உயரிய விருது பெற்ற சோனு சூட்… பாராட்டிய விஜயகாந்த்!

ஐ.நா-வின் உயரிய விருது பெற்ற சோனு சூட்… பாராட்டிய விஜயகாந்த்!

ஐ.நா-வின் சிறந்த சமூக செயல்பாட்டாளருக்கான விருதை பெற்றுள்ள நடிகர் சோனு சூட்டிற்கு விஜயகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். உதவி கேட்போர்கள் பெரும்பாலானோருக்கு இல்லை என்று சொல்லாமல் முடிந்த அளவு தொடர்ந்து உதவி வருகிறார்.

ஐ.நா-வின் உயரிய விருது பெற்ற சோனு சூட்… பாராட்டிய விஜயகாந்த்!

இந்நிலையில், ஐ.நா அமைப்பு சோனு சூட்டின் சமூக சேவையைப் பாராட்டி அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருதை கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. அதையடுத்து சோனு சூட்டிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விருது இதற்கு முன்னர் பிரியங்கா சோப்ரா, ஏஞ்சலினா ஜோலி, லியனார்டோ டி காப்ரியோ, டேவிட் பெக்காம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா-வின் உயரிய விருது பெற்ற சோனு சூட்… பாராட்டிய விஜயகாந்த்!

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சோனு சூட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ” இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு பெரும் உதவி செய்து ஐ.நா-வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது பெற்ற நடிகர் சோனு சூட் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சோனு சூட் விஜயகாந்த் நடித்து 1999-ம் ஆண்டு வெளியான ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்து.

Share this story