அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் விக்ரம்!?

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் விக்ரம்!?

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்க்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் ‘புஷ்பா’. இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தனக் கடத்தல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது சுகுமார் அல்லு அர்ஜுனுடன் கூட்டணியில் உருவாகும் இந்த படமும் பாக்ஸ் ஆபிசில் பிளாக்பஸ்டர் ஆகும் என்று ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் விக்ரம்!?

முதலில் இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அவர் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகளில் மும்மரமாக நடித்து வருவதால் தேதி இல்லை என்று இப்பட வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.

பின்னர் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் விக்ரம்!?

இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரம் ஏற்கனவே படத்தில் ஒப்பந்தமாகிவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் ஏற்கனவே ‘இருமுகன்’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். தற்போது புஷ்பா படத்திலும் நடிப்பதாக இருந்தால் இப்படம் கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story