சைக்கோ த்ரில்லராக உருவாகும் ‘மோகன்தாஸ்’… தொடங்கியது ஷூட்டிங்…

சைக்கோ த்ரில்லராக உருவாகும் ‘மோகன்தாஸ்’… தொடங்கியது ஷூட்டிங்…

சைக்கோ த்ரில்லராக உருவாகும் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

சைக்கோ த்ரில்லராக உருவாகும் ‘மோகன்தாஸ்’… தொடங்கியது ஷூட்டிங்…

வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் விஷ்ணு விஷால், திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் இருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சைக்கோ த்ரில்லராக உருவாகும் ‘மோகன்தாஸ்’… தொடங்கியது ஷூட்டிங்…

இந்த படத்தை முடித்துள்ள விஷ்ணு விஷால், அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிக்கும் அடுத்த படம் ‘மோகன்தாஸ்’. முரளி கார்த்திக் இயக்கவுள்ள இப்படத்தை விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதில் இந்திரஜித் சுமாரான், பூர்ணிமா பாக்கியராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

சைக்கோ த்ரில்லராக உருவாகும் ‘மோகன்தாஸ்’… தொடங்கியது ஷூட்டிங்…

இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படு த்ரில்லிங்காக வெளியான டீசரை பார்க்கும்போதே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ‘மோகன்தாஸ்’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த படப்பூஜையில் நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் முரளி கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Share this story