“நீங்கள் மக்களுக்கு கடவுளால் கிடைத்த பரிசு”… பிரபல நடிகருக்கு புகழாரம் சூட்டிய விஷால்!

“நீங்கள் மக்களுக்கு கடவுளால் கிடைத்த பரிசு”… பிரபல நடிகருக்கு புகழாரம் சூட்டிய விஷால்!

நடிகர் சோனு சூட்டைச் சந்தித்துள்ள விஷால் சோனு மக்களுக்கு கடவுளால் கிடைத்த பரிசு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு நடிகர் சோனு சூட்டை விஷால் சந்தித்துப் பேசியுள்ளார். பாலிவுட் படம் ஒன்றில் விஷால் நடிக்குமாறு சோனு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. விஷாலும் சோனுவின் அழைப்பை ஏற்று அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Image

சோனு சூட்டைச் சந்தித்த விஷால் அவரைப் புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “என் அன்பு சகோதரர் மற்றும் அற்புதமான மனிதர் சோனு சூட்டைச் சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மக்களுக்குக் கிடைத்த கடவுளின் பரிசு. நீங்கள் செய்த சமூகப் பணிகளுகளும் தொடர்ந்து செய்து வருவதும் என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. தெரியாத குடும்பங்களுக்கு உதவ இதுபோன்ற முயற்சியை பலர் எடுப்பதில்லை. நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பார்த்துட் வியந்துவிட்டேன். அட்டகாசம் தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story