கன்னடத்திலும் கெத்து காட்டிய விஸ்வாசம்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

கன்னடத்திலும் கெத்து காட்டிய விஸ்வாசம்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்படம் தமிழகத்தில் அனைத்து குடும்பங்களாலும் கொண்டாடப்பட்டது. பின்னர் தொலைக்காட்சிகளில் அடிக்கடி படம் திரையிடப்பட்டு வந்தது. சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பாகிய விஸ்வாசம் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று மறுபடியும் சாதனை படைத்துள்ளது.
கன்னடத்திலும் கெத்து காட்டிய விஸ்வாசம்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!
விஸ்வாசம் படம் தமிழத்தில் மூன்று முறை ஒளிபரப்பப்பட்டது. அந்த மூன்று முறையும் ஆர்பி-யில் முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்தது.
விஸ்வாசம் படம் கன்னடத்தில் ‘ஜகமல்லா’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. டப்பிங் செய்யப்பட்டத. சமீபத்தில் ஜாகமல்லா உதயா என்னும் கன்னட தொலைக்காட்சியில் 2-வது முறையாக ஒளிபரப்பப்பட்டது.
கன்னடத்திலும் கெத்து காட்டிய விஸ்வாசம்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!
BARC வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி ஜாகமல்லா திரைப்படத்தை 58 லட்சத்து 97 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். கடந்த வாரத்தில் கன்னட டிவியில் ஜாகமல்லா படம் தான் டிஆர்பி-யில் முதலிடத்தில் இருக்கிறது. விஸ்வாசம் படத்தின் மூலமாக உதயா டிவி டிஆர்பி-யில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழத்தில் மட்டுமில்லாமல் கன்னடத்திலும் விஸ்வாசம் சாதனை படைத்திருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story