தேசிய அளவில் தமிழ் இசைக்கு அங்கீகாரம் … டி.இமான் மகிழ்ச்சி !

தேசிய அளவில் தமிழ் இசைக்கு அங்கீகாரம் … டி.இமான் மகிழ்ச்சி !

எனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என‌ டி இமான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு விஜய் நடித்து வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து சில படங்களில் இசையமைத்து வந்தாலும், ஆரம்பக்கட்டத்தில் அவரின் இசைக்கு போதிய வரவேற்பு இல்லை. இதையடுத்து அவர் இசையமைத்த ‘மைனா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தேசிய அளவில் தமிழ் இசைக்கு அங்கீகாரம் … டி.இமான் மகிழ்ச்சி !

பின்னர் அவர்‌ இசையில் உருவான ‘கும்கி’ படம், டி இமானை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து அவர்‌ இசையமைத்த அனைத்து திரைப்படங்களும் ஹிட் அடித்தது. குறிப்பாக வெள்ளக்கார துரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரோமியோ ஜூலியட், மிருதன் போன்ற பெரிய அளவில் வெற்றிப்பெற்றன. மண் மணம் மாறாமல் கிராமத்து கதையம்சம் கொண்டு உருவாகும் இவரின் இசை பாராட்டும் விதமாக உள்ளது. அண்மையில் இவர் இயக்கிய ’டிக்டிக்டிக்’ படத்தோடு தனது 100வது படத்தை நிறைவு செய்து சாதனை படைத்தார். 

தேசிய அளவில் தமிழ் இசைக்கு அங்கீகாரம் … டி.இமான் மகிழ்ச்சி !

இந்நிலையில் 67வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ உள்ளிட்ட பாடல்களை இசையமைத்த டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டி இமான், கடவுள் அருளாலும், என் பெற்றோரின் ஆசி மற்றும் உலகம் முழுவதும் உள்ள இசைப்பிரியர்களின் ஆதரவால் இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது.

மேலும், எனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய அளவில் தமிழ் இசைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் சந்தோஷமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share this story