“கேதர் யாதவ்னு பெயர் வச்சிருந்தா புயல் அடிக்காமலே போயிரும்”… நடிகர் விவேக் பதில்!

“கேதர் யாதவ்னு பெயர் வச்சிருந்தா புயல் அடிக்காமலே போயிரும்”… நடிகர் விவேக் பதில்!

கேதர் ஜாதவையும் நிவர் புயலையும் சேர்த்து வைத்து வெளியான மீம் ஒன்றைப் பகிர்ந்து நகைச்சுவையாக பதிலளித்துள்ளார் விவேக்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டு மக்களை சுழட்டி சுழட்டி அடித்து வருகிறது. புயலால் வீசிய காற்றில் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை நீச்சல் குளமாக ஆகிவிட்ட நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியை வேறு திறந்துவிட்டிருக்கிறாரகள். இதனால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

“கேதர் யாதவ்னு பெயர் வச்சிருந்தா புயல் அடிக்காமலே போயிரும்”… நடிகர் விவேக் பதில்!

சமீபத்தில் நடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த கேதர் ஜாதவ் பல மேட்ச் விளையாண்டும் சரியாக ரன் அடிக்கவில்லை. இதனால் மீம் கிரியேட்டர்கள் அவரை வச்சு செய்தனர்.

ஐபிஎல் முடிந்து பல நாட்கள் ஆகியும் மீம் கிரியேட்டர்கள் அவரை விட்டபாடில்லை. தற்போது மீம் கிரியேட்டர்களுக்கு கான்செப்ட் ஆகியுள்ள நிவர் புயலையும் நம்ம கேதர் ஜாதவையும் வச்சு மீம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.

Image

புதுசா வர்ற புயலுக்கு கேதர் யாதவ் என்று பேர் வச்சிருந்தா அடிக்காமலே போயிரும் என்று மீம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.

இதனைப் பகிர்ந்த விவேக் “எப்பவோ நடிச்ச ஒரு காமெடி சீனின் ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா!! ஐடியா உள்ள பசங்க!!” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

Share this story