காதலர் தினத்தில் சர்ப்ரைஸ்… ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கும் ஜாக்லின் !

காதலர் தினத்தில் சர்ப்ரைஸ்… ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கும் ஜாக்லின் !

காதலன் தினத்தில் ஒரு சஸ்பென்ஸ் காத்திருப்பதாக பிரபல விஜே ஜாக்லின் தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தில் சர்ப்ரைஸ்… ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கும் ஜாக்லின் !

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு’. இந்த நிகழ்ச்சி வழங்கி வருபவர் விஜே ஜாக்லின். இந்த நிகழ்ச்சியில் ஜாக்லின் கீச்சு குரலும், கலகலப்பான பேச்சும் ரசிகர்களிடையே இவரை புகழ் அடைய செய்தது. இதையடுத்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ஜாக்லின். ஆண்டாள் அழகர் தொடர் மூலம் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்பு தேடி வந்தது.

காதலர் தினத்தில் சர்ப்ரைஸ்… ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கும் ஜாக்லின் !

தற்போது தேன்மொழி பி.ஏ. என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. சீரியல், ரியால்டி ஷோ என இரண்டிலும் இவர் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை தொடங்க இருக்கிறேன். இதுவரைக்கும் நீங்கள் என்னை உங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து கொடுத்த ஆதரவுக்கு நன்றி. மேலும் நாம் இப்ப பண்ணப்போகும் விஷயத்துக்கு இதேமாதிரியான ஆதரவை எதிர்பார்க்கிறேன். வாழ்க்கை மிகவும் சிறியது. எப்போது மகிழ்ச்சியாக இருங்கள் நண்பா. கடைசியாக ‘என்ன என்று யூகியுங்கள்’ என்று விஜே ஜாக்லின் கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஜாக்லின் என்ன யூகிக்க சொல்லுகிறார் என குழம்பி வருகின்றனர்.

Share this story