ஒளிபரப்பை நிறுத்திய தமிழர்களின் இரண்டு பேவரைட் ஆங்கில சேனல்கள் !

ஒளிபரப்பை நிறுத்திய தமிழர்களின் இரண்டு பேவரைட் ஆங்கில சேனல்கள் !

ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களை ஒளிபரப்பிவந்த வார்னர் நிறுவனத்திற்கு சொந்தமான HBO மற்றும் WB ஆகிய சேனல்கள் தங்களது ஒளிபரப்பை கடந்த 15 ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் சில நாடுகளில் தங்களது ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது நேயர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய ஆங்கில சேனல்கள் என்றால் அது HBO மற்றும் இதர விளையாட்டு சேனல்கள் தான்.
இதில் HBO கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் வார்னர் நிறுவனத்திற்கு சொந்தமான இன்னொரு சேனலான WB கடந்த 2009 முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஒளிபரப்பை நிறுத்திய தமிழர்களின் இரண்டு பேவரைட் ஆங்கில சேனல்கள் !

ஒடிடி தளங்கள் வந்ததில் இருந்தே ரசிகர்கள் பலரும் ஆங்கில படங்களை பார்ப்பதற்கு முக்கால்வாசி அவற்றையே தேவைப்படும் நேரங்களில் நாடுகின்றனர். இதனால் டிவி சேனல்களில் வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது. ஏற்கனவே சேனலின் வளர்ச்சி குறைந்துள்ளதால் இந்த இரண்டு சேனல்கள் மூடப்படும் என்று அக்டோபர் மாதமே தகவல் வெளியானது. மேலும் கொரோனா காலகட்டமும் இந்த இரண்டு சேனல்களில் வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தங்களது இணையதளத்தில் செய்தி வெளியிட்ட HBO , இரண்டு தசாப்தங்களாக என்டர்டெயின்மென்ட், 20 வருடங்களாக உங்களது முகத்தில் சிரிப்புகள் , 240 மாதங்களாக எண்ணிக்கை இல்லாத திரைப்படங்கள், 7300 நாட்கள் சினிமாவின் அனுபவத்தை புதுப்பித்தோம் , மிகவும் கனத்த இதயத்துடன் உங்களை விட்டு பிரிக்கிறோம் . ஆனால் எங்களிடம் இருந்து இது கேட்பது கடைசி அல்ல என்று சத்தியம் செய்கிறோம். அதுவரையில் அற்புதமான நேயர்களாகவும் எங்களது காலத்தில் எங்களுக்கு ஆதரவாக இருந்ததற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தங்களுக்கென ஒரு புதிய ஒடிடி தளத்தை HBO MAX என்ற பெயரில் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story