ரஜினியை போன்று மம்மூட்டி, மோகன்லால் அரசியலில் வர விரும்பினால் ஆதரிப்பீர்களா ?

ரஜினியை போன்று மம்மூட்டி, மோகன்லால் அரசியலில் வர விரும்பினால் ஆதரிப்பீர்களா ?

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதாக கூறியுள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மலையாள திரை உலகில் உள்ள நடிகர்களும் அரசியலில் இறங்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வைரலாகி வருகிறது.

ரஜினியை போன்று மம்மூட்டி, மோகன்லால் அரசியலில் வர விரும்பினால் ஆதரிப்பீர்களா ?

மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் நேரம், பிரேமம் போன்ற படங்கள் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது சமூக சிந்தனைகளையும் கருத்துக்களையும் பதிவிடுவார். அப்படி, நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை ஆதரித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருந்தார்.

ரஜினியை போன்று மம்மூட்டி, மோகன்லால் அரசியலில் வர விரும்பினால் ஆதரிப்பீர்களா ?

இதற்கு நிறைய லைக்குகள் குவிந்தன. இந்நிலையில் இவரை பின் தொடரும் ரசிகர் ஒருவர், ”கேரளாவில் இப்படி மம்முட்டி, மோகன்லால் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா ?” என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் புத்திரன், ஏன் செய்ய மாட்டேன்? கேரள மக்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள் என நினைக்கிறேன் அவர்கள் அரசியலையும், சினிமாவையும் கலக்க மாட்டார்கள், மம்மூட்டி, மோகன்லால் இருவரும் முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள் என நினைக்கிறேன் என பதிலளித்திருந்தார்.

ரஜினியை போன்று மம்மூட்டி, மோகன்லால் அரசியலில் வர விரும்பினால் ஆதரிப்பீர்களா ?

கேரளாவில் நடிகைகள் , நடிகர்கள் அரசியலில் இறங்குவது மிகக்குறைவே, அப்படி அரசியலில் இறங்கிய சிலரும் எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகளுக்கு மட்டுமே போட்டியிட்டுள்ளனர். இதுவரை பெரிய ஹீரோக்கள் யாரும் கேரள அரசியலில் போட்டியிட்டதில்லை.

Share this story