“பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்”… ராதிகா ஆதங்கம்!

“பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்”… ராதிகா ஆதங்கம்!

ராதிகா சரத்குமார், கொரோனா விதிமுறைகளை மீறும் மக்களைப் பார்க்கும்போது அச்சமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Why Kerala has done more coronavirus tests than Tamil Nadu – and why this must change

நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது தவிர குறைந்த பாடில்லை. இருந்தாலும் பல மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  அதை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. மக்கள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள். இருந்தாலும் பலர் அதை கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி வெளியில் சென்று வருகின்றனர்.

“பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்”… ராதிகா ஆதங்கம்!

இது தொடர்பாக ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில் “கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு போகவில்லை. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும். மூக்கு மற்றும் வாயை மூடி சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். மக்கள் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை புறக்கணிப்பதைக் கண்டு வியப்பாகவும் பயமாகவும் இருக்கிறது. எப்போது நாம் கற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story