வடிவேலுவை ஓரங்கட்டிய யோகிபாபு!

வடிவேலுவை ஓரங்கட்டிய யோகிபாபு!

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள ‘பேய் மாமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் யோகிபாபு, இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இயக்குனர் சக்தி சிதம்பரம்சார்லி சாப்ளின், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், சண்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கியிருந்தார்.

Image

முதலில் இந்த பேய் மாமா படத்தில் வடிவேலு தான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் யோகிபாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் குமுளியில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Share this story