வலிமை பட இசையில் புதுவித முயற்சி… தீம் ம்யூசிக் ரெடி… யுவன் ஷங்கர் ராஜா அப்டேட்!

வலிமை பட இசையில் புதுவித முயற்சி… தீம் ம்யூசிக் ரெடி… யுவன் ஷங்கர் ராஜா அப்டேட்!

வலிமை படத்திற்காக இசையில் புதுவித முயற்சியை கையாண்டுள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கும் இந்தப்படத்தில், அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வலிமை பட இசையில் புதுவித முயற்சி… தீம் ம்யூசிக் ரெடி… யுவன் ஷங்கர் ராஜா அப்டேட்!

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்-யுவன் காம்போ என்றாலே படத்தின் வெற்றி பாதி உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். பில்லா, மங்காத்தா படங்களின் பிஜிஎம் இன்றுவரையிலும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வலிமை படத்திற்கு இசையமைத்து வரும் யுவன் இதுவரை வேலை செய்த படங்களிலேயே வலிமை படம் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் வலிமை பட இசை பற்றி பேசிய யுவன்

“வலிமை படத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கிட்டார் பயன்படுத்தாமல் ஒரு தீம் மியூசிக் ரெடி செய்துள்ளேன்.

வலிமை பட இசையில் புதுவித முயற்சி… தீம் ம்யூசிக் ரெடி… யுவன் ஷங்கர் ராஜா அப்டேட்!

இதுவரைக்கும் இப்படத்தில் 3 பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டேன், ஒரு தீம் மியூசிக் முடிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். எனவே வெறித்தனமான பிஜிஎம் வரவிருக்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஊரடங்கால் நிறுத்தப்பட்ட வலிமை படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்க உள்ளது. அக்டோபர் 25-ம் தேதி முதல் அஜித் ஹைதெராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story