விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எழுத ‘வலிமை’ இன்ட்ரோ பாடலை முடித்த யுவன்!?கொண்டாடும் ரசிகர்கள்!

விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எழுத ‘வலிமை’ இன்ட்ரோ பாடலை முடித்த யுவன்!?கொண்டாடும் ரசிகர்கள்!

யுவன் ஷங்கர் ராஜ வலிமை படத்தின் அறிமுகப் பாடலை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித்- ஹெச் வினோத் உடன் கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். போனி கபூர் தயாரிக்கிறார்.

விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எழுத ‘வலிமை’ இன்ட்ரோ பாடலை முடித்த யுவன்!?கொண்டாடும் ரசிகர்கள்!

இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது யுவன் ஷங்கர் ராஜா வலிமை படத்தின் அறிமுகப் பாடலை உருவாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடலுக்காக ஒரிசாவில் விழாக்களில் டிரம் வாசிக்கும் கலைஞர்களை யுவன் வரவழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்தப் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளாராம்.

அதனால் வலிமை அறிமுகப் பாடல் மாஸாக இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ட்விட்டரில் #ValimaiIntroSong என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story