×

2023-ல் மலையாளத்தில் 220 திரைப்படங்கள் வெளியீடு

 

கடந்த சில ஆண்டுகளாக மோலிவுட் எனப்படும் மலையாள சினிமா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாக இந்திய அளவில் கவனம் பெற்று, மலையாள திரைப்படங்களும் வசூல்களில் தடம் பதித்து வருகிறது. 
குறிப்பாக, இந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வரை சுமார் 220 திரைப்படங்கள் மலையாள மொழியில் மட்டும் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கி்ல படங்கள் வெளியாகினாலும், 13 திரைப்படங்கள் மட்டுமே இதில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. அதில், முன்னணி மற்றும் அறிமுக நடிகர்களின் திரைப்படங்களும் அடங்கும்.

கண்ணூர் ஸ்குவாட், 2018 திரைப்படம் மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்றது.அதேபோல, ரோமாஞ்சம், மாலிக்காபுரம் உள்ளிட்ட படங்களும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.