×

பஹத் ஃபாசில், ஜல்லிக்கட்டு, கும்பலங்கி நைட்ஸ்… 2019-ம் ஆண்டிற்கான கேரள அரசின் விருது வென்றவர்கள் பட்டியல்!

கேரள அரசின் 50-வது திரைப்பட விருதுகள், 2019-ம் ஆண்டிற்கான கேரள மாநில அரசின் விருது வென்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த திரைப்படம்: ஷினோஸ் ரஹ்மான் மற்றும் சஜாஸ் ரஹ்மான் ஆகியோரால் இயக்கப்பட்ட ‘வசந்தி‘ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப்படதத்திற்குக் கிடைத்துள்ளது. சிறந்த நடிகர்: நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ மற்றும் ‘விக்ருதி’ ஆகிய படங்களில் நடித்ததற்காக! சிறந்த நடிகை: ‘பிரியாணி’ படத்தில் நடித்த
 

கேரள அரசின் 50-வது திரைப்பட விருதுகள், 2019-ம் ஆண்டிற்கான கேரள மாநில அரசின் விருது வென்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Vasanthi Movie

சிறந்த திரைப்படம்: ஷினோஸ் ரஹ்மான் மற்றும் சஜாஸ் ரஹ்மான் ஆகியோரால் இயக்கப்பட்ட ‘வசந்தி‘ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப்படதத்திற்குக் கிடைத்துள்ளது.

Suraj Venjaramoodu

சிறந்த நடிகர்: நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ மற்றும் ‘விக்ருதி’ ஆகிய படங்களில் நடித்ததற்காக!

சிறந்த நடிகை: ‘பிரியாணி’ படத்தில் நடித்த கனி குஸ்ருதிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த இயக்குனர்: ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்கு சிறந்த இயக்குனருக்கான கேரள அரசின் மாநில விருது கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டு திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

kumbalangi-nights


சிறந்த பிரபல திரைப்படம்: பகத் பாசில், ஷோபின் சாஹிர், ஷான் நிகம், அன்னா பென் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘கும்பலங்கி நைட்ஸ்’ படத்திற்கு சிறந்த பிரபல திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது கேரளாவில் 2019ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் கும்பலங்கி நைட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


சிறந்த அறிமுக இயக்குனர்: ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்திற்காக ரதீஷ் பொதுவல் என்பவருக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.


சிறந்த குணச்சித்திர நடிகர்: ‘கும்பலங்கி நைட்ஸ்’ படத்திற்காக நடிகர் பகத் பாசிலுக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அந்த படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சிறந்த குணச்சித்திர நடிகை: ‘வசந்தி’ படத்திற்காக சுவாசிகா விஜய் என்பவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.


அன்னா பென்(ஹெலன்) நிவின்பாலி நடித்த (மூத்தோன்) பிரியம் வட கிருஷ்ணன் (தொட்டப்பன்) ஆகிய நடிகர்களுக்கு நடுவர்களின் சிறப்பு விருது கிடைத்துள்ளது


சிறந்த இரண்டாவது திரைப்படம்: கெஞ்சிரா
சிறந்த இசையமைப்பாளர்: சுசியம் (கும்பலங்கி நைட்ஸ்)
சிறந்த பின்னணி பாடகர்: நஜீம் அர்ஷாத்
சிறந்த பின்னணிப் பாடகி: மதுஸ்ரீ நாராயணன்
சிறந்த தொகுப்பாளர்: கிரண் தாஸ்
சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம்: நானி