×

69வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. சிறந்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’... சிறந்த பின்னணி இசை கீரவாணி..

 

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் சிறந்த படமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஒவ்வொரும் திரைத்துறையில் ரசிகர்களின் மனங்களை வென்ற சிறப்பு படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம், இசையமைப்பாளர் என பல பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், நடனம், சண்டைப்பயிற்சி, ஸ்பெஷ எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய கீரவாணிக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடகருக்கான விருதை கால பைரவாவுக்கு வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்துள்ளது .