×

வேதாளமாக மாறிய சிரஞ்சீவி.. நியூ லுக் வைரல் !

 

'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்காக நடிகர் சிரஞ்சீவி புதிய கெட்டப்பிற்கு மாறிய புகைப்படம் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஃபோலா ஷங்கர்’. இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏகே எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது விறுவிறுப்படைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் சிரஞ்சீவி புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார். மொட்டை தலையுடன் சிரஞ்சீவி மிரட்டலாக இருக்கிறார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காகும். அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக லஷ்மி மேனனும், கதாநாயகியாக ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.