×

ராம அவதாரம் எடுத்துள்ள பிரபாஸ்... அசத்தலான ஆதிபுருஷ் டீசர் வெளியீடு !

 

 பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது. 

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கின்றனர். சுமார் 500 கோடியில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

இராமாயணத்தை மையப்படுத்தி முழுக்க முழுக்க 3டி டெக்னாலஜியில் இப்படம் உருவாகி வருகிறது. ராவணனை வதம் செய்த ராமரின் கதைக்களம் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. ஹாலிவுட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி வருகிறது. அதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர், இன்று  ஆயுதப்பூஜையையொட்டி இராமர் பிறந்த பூமியான அயோத்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராம அவதாரத்தில் பிரபாஸ் அசத்தலான இருக்கிறார். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.